வெட்சி மலர்
தாவரப்பெயர்: Ixoreae
வளரியல்பு: குட்டை செடி
தற்போதைய பெயர்: இட்லிப் பூ, தெச்சி
இலக்கியம் :
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு வெட்சி மாமலர் - புறநானூறு 100-5
பொருள்: அதியமான் போர்க்கோலம் பூண்டபோது போந்தை(பனை), வெட்சி, வேங்கை ஆகிய மூன்று பூக்களையும் கலந்து கட்டிய கண்ணியைத் தலையில் சூடியிருந்தான்.
செங்கால் வெட்சி - திருமுருகாற்றுப்படை 21
பொருள்: முருகப்பெருமானை வழிபட்ட சூரர மகளிர் சூடியிருந்த மலர்களில் சிவந்த காம்பினைக் கொண்ட வெட்சியும் இருந்தது.
குறிஞ்சிப்பாட்டு 63
பொருள்: குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வெட்சி.
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி - அகநானூறு 133-14
பொருள்: காடைப் பறவையின் கால்நக முள் போல வெட்சிப்பூ முதிரும்.
புறநானூறு 202-1
பொருள்: வெட்சிக்கானத்தில் வேட்டுவர் கடம்பு மானைத் துரத்திப் பிடிப்பர்.
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் - பரிபாடல் 22-22
பொருள்: வையையில் நீரீடச் சென்ற மகளிர் வெட்சிப் பூவைத் தலையில் அணிந்திருந்தனர்.
புல்லிலை வெட்சி - கலித்தொகை 103-2
பொருள்: ஏறு தழுவச் சென்றபோது, இடையர் குலக் காளையர் சூடியிருந்த பன்மலர்க் கண்ணியில் வெட்சிப்பூ அதன் இலைகளுடன் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த்து.
வெட்சி நிரை கவர்தல் - சங்க காலத்தில் எதிரி நாட்டுடன் போர் புரிய விரும்புவதை சூசகமாக தெரிவிக்க அந்த நாட்டு பசுக்களை கவர்ந்து வருவர், அப்போது வெட்சி பூவை சூடிச்செல்வர்.
தன்மைகள்:
வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ. அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.
நன்றி: விக்கிபீடியா, http://www.flowersofindia.net/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக