இன்று நான் படித்த இந்த குறுந்தொகை பாடலை உங்களுடன் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாடல்:
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே" -செம்புலப் பெயல்நீரார்
இதை அழகு என்று சொல்வதா அல்லது நளினம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஒரு தலைவன் தலைவியிடம் அளவளாவும் இடம் என எடுத்துக்கொள்ளலாம்.
பொருள்:
உன் தாயும் என் தாயும் தொடர்பு முறையில் யாராவார்கள்?
உன் தந்தையும் என் தந்தையும் எந்த முறையில் உறவினர் ஆவர்?
நீயும் நானும் எந்த வகையில் அறிமுகமானோம்?
அனால், செம்மண் பூமியில் விழுந்த மழை போல
அன்பு கொண்ட நம் இருவரின் இதயங்களும் ஒன்றாக கலந்தனவே.

தூய காதலின் வெளிப்பாடு, மிகவும் அருமை..!
பதிலளிநீக்குமிக்க நன்றி கஜேந்திரன் அவர்களே!!!!
பதிலளிநீக்கு