ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பண்டைய தமிழன் ஓட்டிய கப்பல் - புறநானூறு விளக்கம்




வெண்ணிக்குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர்களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,

நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

விளக்கம்:
''வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!'' 

வளி-காற்று
முந்நீர்-கடல்
நாவாய்-கப்பல்

இன்னும் தொடரும்....

1 கருத்து:

  1. தங்கள் ஆராய்ச்சி மேலும் தொடர என் வாழ்த்துக்கள்...! இது ஒரு நல்ல முயற்சி.

    பதிலளிநீக்கு